Class 10 | PHYSICS |
Chapter | ஒளியியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் ___________.
ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _____________ தோற்றுவிக்கப் படுகிறது.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் `V_B, V_G, V_R` எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____________
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ____________ சிதறல் எனப்படும்.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் ______________ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
___________ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது. அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) குவிலென்சானது. எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும். காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
ஸ்நெல் விதியைக் கூறுக.
நிறப்பிரிகை வரையறு.
ராலே சிதறல் விதியைக் கூறுக.
குவிலென்சு மற்றும் குழிலென்சு வேறுபடுத்துக.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
ஒளியின் ஏதேனும் ஐந்துப் பண்புகளைக் கூறுக
10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால், அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால், அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
ஒளியின் பாதை ___________
கதிர்களின் தொகுப்பு ____________
ஒளியின் திசைவேகம்
ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளத்தின் தொடர்பு _________
ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _____________
நாம் பொருட்களை காண்பது ____________ நிகழ்வினால் ஆகும்.
ஊடகத்தில் ஒளியின் வேகத்தை நிர்ணயிப்பது ______________
ஒளியானது அடர்வுகுறை ஊடகத்திலிருந்து அடர்வுமிகு ஊடகத்திற்கு செல்லும்போது விலகலடைந்த கதிர் _____________ நோக்கி விலகிச் செல்லும்.
காற்றில் ஒளிவிலகல் எண் __________
ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அது வளைகிறது. இந்நிகழ்வு __________
மழைக் காலங்களின் போது நீரின் மீது மெல்லிய எண்ணெய்ப் படலத்தில் பல வண்ணங்கள் தோன்றும். ஏனெனில்
வானவில் தோற்றம் நீர்த்துளிகளின் ______________ ஆல் ஏற்படுகிறது.
போக்குவரத்து சைகை விளக்குகள் சிவப்பு வண்ணத்தில் உள்ளது. ஏனெனில் ___________
வானத்தில் ஒரு விண்மீன் போல் தோன்றுவது வளிமண்டலத்தால் உண்டாகும் ____________
ஒரு ஒளிக்கற்றையானது ஒரு கூழ்மக் கரைசலில் செல்லும்போது ஒளியானது _______________
சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் ____________
ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகள்களால் ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு __________
ஒளிக்கதிரின் அலைநீளம் மற்றும் அதிர்வெண்ணில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு ___________
படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ________________
இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் _____________
குவிலென்சு என்பவை ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிப்பதால் இவை ____________
குழிலென்சு என்பது __________
கோளக லென்சுகளில் இதிலிருந்து தொலைவுகள் அளவிடப்படுகின்றன
லென்சின் ஒரு பகுதி வழியே எந்த விலகலும் அடையாமல் ஒளி கடந்து செல்லும் புள்ளி
குவிலென்சில் மாய பிம்பம் உருவாக்கப்படும்போது பொருள் எந்நிலையில் வைக்கப்படும்போது
கோளக லென்சுகளால் பிம்பம் உருவாக்கப்படுவது இந்நிகழ்வினால்
ஸ்நெல் விதி =
தலைகீழ், மெய், பொருளின் அதே அளவுடைய பிம்பம் பெற பொருளானது குவிலென்சின் இந்நிலையில் வைக்கப்பட வேண்டும்.
ஒரு ஒளிக்கதிர் நீரிலிருந்து கண்ணாடிக்குள் நுழையும்போது
குழி லென்சு பயன்படுத்தப்படுவது
லென்சு வாய்ப்பாடு
லென்சினால் உருவாக்கப்படும் உருப்பெருக்கம்
குவி லென்சினால் உருவாக்கப்படும் மெய் பிம்பங்கள் எப்பொழுதும்
ஒரு குவிலென்சு மிகச்சிறிய, தலைகீழான, மெய் பிம்பத்தை உருவாக்குகிறது எனில் ஒரு பொருள் வைக்கப்படும் நிலை.
பொருளானது Fல் வைக்கப்படும்போது குவிலென்சால் உருவாக்கப்படும் பிம்பத்தின் தன்மை
லென்சிற்கும் குவியத்திற்கும் இடையேயான தொலைவு
ஒரு நபர் ஒரு குழிலென்சை சாதாரண உருப்பெருக்க லெலன்சாக பயன்படுத்துகிறார் எனில் பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
முக்கிய அச்சு லென்சின் பரப்பினை சந்திக்கும் புள்ளி
குழிலென்சினால் உருவாக்கப்படும் பிம்பம்
ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு _______________
ஒரு குவிலென்சிலிருந்து ஒரு பொருள் 12 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ளது. அதன் குவிய தொலைவு 10 செ.மீ பிம்பமானது
லென்சு வாய்ப்பாடு
ஒரு குவிலென்சில் ஒரு பொருள் ஒளிமையம் மற்றும் ஈறிலாத் தொலைவிற்குமிடையே வைக்கப்படும்போது. பிம்பங்கள் உருவாகும் நிலை
லென்சின் குவியதொலைவின் தலைகீழ் மதிப்பு
மனிதர்களின் கண்ணில் [ரெட்டினாவில்] ஏற்படும் பிம்பம்
தெளிவுறுக்காட்சியின் மீச்சிறு தொலைவு
விழிலென்சு தன் குவிய தூரத்தை மாற்றிக் கொள்ள இத்தசைகள் உதவுகின்றன
கண்ணில் படும் ஒளியின் நிகழ்வு
பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இதன் வழியாகவே விழித்திரையை அடைகின்றன.
கண்விழியின் விட்டம்
இதனை அடையும் ஒளிக்கதிர்கள் ஒளிவிலகல் அடையச் செய்யப்பட்டு விழிலென்சின் திறன்மீது குவிக்கப்படுகிறது.
கண்ணில் பொருளின் பிம்பம் உருவாகும் பகுதி
ஒரு நபர் 50 செ.மீக்கு அப்பால் தெளிவாக பொருள்களை காண முடிவதில்லை. பார்வையை சரிசெய்யத் தேவையான லென்சின் திறன்
ஒரு நபர் கிட்டப்பார்வை குறைபாடு உடையவர் எனில் அவரால்
கிட்டப்பார்வையை சரிசெய்ய
ஒரு குவி லென்சு கண்ணின் எக்குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது?
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு ஏற்படுவது ஏனெனில்
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு ['பிரெஸ்பையோபியா'] இதனால் சரி செய்யப் படுகிறது
பார்வைச் சிதறல் குறைபாடு ['அஸ்டிக்மாடிஸம்'] உடைய கண்களால் இதனை தெளிவாகக் காண இயலாது
பார்வை சிதறல் குறைபாட்டினை சரி செய்ய
புவிப்பரப்பில் உள்ள பொருள்களை காண்பதற்கு ஏற்றவை
கூட்டு நுண்ணோக்கியில் இரு குவிலென்சுகள் பயன்படுத்தப்படுவதன் காரணம்
குறியீட்டு மரபின்படி குவி லென்சின் திறன் மற்றும் குழி லென்சின் திறன்
ஒரு எளிய நுண்ணோக்கியில் உள்ளவை
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடு
ஒரு கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம்
EXERCISE questions and complete solutions for chapter ஒளியியல் of SURA PHYSICS (TAMIL) of Class 10