Class 10 | MATHS |
Chapter | அறு மாதிரி விணாத்தான் - 2019-20 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 47 |
Academic Year | 2023-24 |
n(A x B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது, ( 1).1, (2).2, (3).3, (4).6,
F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
`f= {(2, a), (3, b), (4, b), (5, c )}` ஒரு ________.
`x^2 + 4x + 4` என்ற இருபடி பல்லுறுப்புக்கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை.
எந்தவோர் அலகு அணியிலும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகள் _____.
A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை.
(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு `1/8` எனில், 'a' -யின் மதிப்பு.
`x = a tan theta` மற்றும் `y = b sec theta` எனில்,
"PROBABILITY" என்ற சொல்லின் எழுத்துக்களிலிருந்து ஒரு எழுத்து தேர்ந்தெடுக்கப்படுகிறது அது உயிரெழுத்து இல்லாமலிருக்க நிகழ்தகவு
ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கானது ?
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது ?
`10^4 equiv x (mod 19)` என்றவாறு அமையும் x -இன் மதிப்பை கணக்கிடுக.
சுருக்குக `(4x^2y) / (2z^2)` X `(6xz^3) / (20y^4)`
ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்.
கீழ்க்காணும் சமன்பாடுகளிலிருந்து x, y மற்றும் z -யின் மதிப்பைக் காண்க. `[[12, 3], [x, 3/2]]` = `[[y, z], [3, 5]]`
சுவரின் அடியிலிருந்து 4 அடி தொலைவில் உள்ள ஏணியானது சுவரின் உச்சியை 7 அடி உயரத்தில் தொடுமெனில் தேவையான ஏணியின் நீளத்தைக் காண்க.
நிறுவுக: `sqrt frac{1+cos theta}{1-cos theta} = cosec theta + cot theta`.
ஒரு கோளத்தின் ஆரம் 25% அதிகரிக்கும் போது, அதிகமாகும் புறப்பரப்பின் சதவீதம் காண்க.
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் , மாறுபாட்டுக் கெழுவைக் காண்க ?
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா சோதிக்க. f(x) = 3 + x, g(x) = x - 4
ஒரு நிறுவனம் 25 தெருக்களில் செடிகளை நட திட்டமிட்டது. முதல் தெருவில் 1 செடியும், இரண்டாவது தெருவில் 3 செடிகளும், மூன்றாவது தெருவில் 9 செடிகளும் நட முடிவு செய்யப்பட்டது. இவ்வேலை நிறைவடைய எத்தனை செடிகள் தேவை?
-11,-15,-19,...என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 19 -வது உறுப்பைக் காண்க.
A (-1,3), B (1,-1) மற்றும் C (5,1) என்பன ஒரு முக்கோணத்தின் முனைகள் எனில் முனை C வழியேச் செல்லும் நடுக்கோட்டின் நீளம் காண்க.
f : N→N என்ற சார்பானது f (x) = 3x + 2, `x in N` என வரையறுக்கப்பட்டால். 1,2,3- ன் நிழல் உருக்களைக் காண்க.
f : N→N என்ற சார்பானது f (x) = 3x + 2, `x in N` என வரையறுக்கப்பட்டால், 29 மற்றும் 53- ன் முன் உருக்களைக் காண்க.
f : N→N என்ற சார்பானது f (x) = 3x + 2, `x in N` என வரையறுக்கப்பட்டால். சார்பின் வகையைக் காண்க.
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. வரிசைச் சோடிகளின் கணம்.
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. அட்டவணை
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. அம்புகுறி படம்
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. வரைபடம்
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6 -வது மற்றும் 8-வது உறுப்புகளின் விகிதம் 7:9 எனில். 9-வது மற்றும் 13-வது உறுப்புகளின் விகிதம் காண்க.
`S_1, S_2, S_3` என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் n, 2n, 3n உறுப்புகளின் கூடுதல் ஆகும். `S_3= 3(S_2 - S_1)` என நிறுவுக.
கீழ்க்காணும் பல்லுருப்புக்கோவைகள் முழு வர்க்கங்கள் எனில் m மற்றும் n -யின் மதிப்பு காண்க. `1/x^4 - 6/x^3 + 13/x^2 + m/x + n`
`2x^2 - x - 1 = 0` என்ற சமன்பாட்டின் மூலங்கள் `alpha` மற்றும் `beta` எனில் , கீழ்க்கண்டவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க. `alpha^2beta`, `beta^2alpha`
செங்கோண முக்கோணம் ABC `angleC = 90^@` CA மற்றும் CB இன் மையப்புள்ளிகள் P மற்றும் Q எனில், `4(AQ^2 + BP^2)` = 5 `AB^2` என நிறுவுக.
(1, -4) என்ற புள்ளி வழிச்செல்வதும், வெட்டுத் துண்டுகளின் விகிதம் 2:5 உள்ளதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
60 மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சியிலிருந்து செங்குத்தாக உள்ள ஒரு விளக்கும் கம்பத்தில் உச்சி மற்றும் அடியின் இறக்கக் கோணங்கள் முறையே `38^@` மற்றும் `60^@` எனில், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க (`tan38^@ = 0.7813, sqrt 3 =1.732`).
ஓர் உள்ளீடற்ற பித்தளை கோளத்தின் உள்ளிட்டம் 14 செ.மீ, தடிமன் 1 மி.மீ மற்றும் பித்தளையின் அடர்த்தி 17.3 கிராம்/க.செமீ எனில், கோளத்தின் எடையைக் கணக்கிடுக.
24, 26, 33, 37, 29, 31 ஆகியவற்றின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
நீல நிறம் மற்றும் சாம்பல் நிறம் கொண்ட இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இதன் அனைத்து முடிகளையும் எழுதுக. பகடைகளின் மீது விழும் எண்களின் கூடுதல் 8 என கிடைக்க நிகழ்தகவு என்ன?
நீல நிறம் மற்றும் சாம்பல் நிறம் கொண்ட இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இதன் அனைத்து முடிகளையும் எழுதுக. பகடைகளின் மீது விழும் எண்களின் கூடுதல் 13 என கிடைக்க நிகழ்தகவு என்ன?
நீல நிறம் மற்றும் சாம்பல் நிறம் கொண்ட இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இதன் அனைத்து முடிகளையும் எழுதுக. பகடைகளின் மீது விழும் எண்களின் கூடுதல் 12-க்குச் சமமாகவும் அதை விட குறைவாகவும் என கிடைக்க நிகழ்தகவு என்ன?
வர்க்கங்களின் கூடுதல் 365 வரக்கூடிய அடுத்தடுத்த மிகை முழுக்கள் இரண்டினைக் காண்க.
32 செ.மீ உயரமும் 18 செ.மீ அடிப்பக்க ஆரமும் உடைய ஓர் உருளை வடிவ வாளியில் முழுமையாக மணல் உள்ளது. இந்த மணல் தரையில் கொட்டப்பட்டு கூம்பு வடிவில் அமைக்கப்படுகிறது. அந்தக் கூம்பின் உயரம் 24 செ.மீ எனில் அதன் ஆரத்தையும், சாயுயரத்தையும் காண்க.
`y = x^2 + 3x - 4` வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி `x^2 + 3x - 4 = 0` என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
EXERCISE questions and complete solutions for chapter அறு மாதிரி விணாத்தான் - 2019-20 of SURA MATHS (TAMIL) of Class 10