Class 10 | MATHS |
Chapter | அளவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 73 |
Academic Year | 2023-24 |
ஓர் உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம் 5:7 ஆகும். அதன் வளைபரப்பு 5500 ச.செ.மீ எனில், உருளையின் ஆரம் மற்றும் உயரம் காண்க.
ஒரு திண்ம இரும்பு உருளையின் மொத்தப் புறப்பரப்பு 1848 ச.மீ மேலும் அதன் வளைபரப்பு, மொத்தப் புறப்பரப்பில் ஆறில் ஐந்து பங்காகும் எனில், இரும்பு உருளையின் ஆரம் மற்றும் உயரம் காணவும்.
ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் மற்றும் நீளம் முறையே 16 செ.மீ மற்றும் 13 செ.மீ ஆகும். அதன் தடிமன் 4 செ.மீ எனில் உருளையின் மொத்தப் புறப்பரப்பு எவ்வளவு?
PQR என்ற செங்கோண முக்கோணத்தில் QR = 16செ.மீ, PR = -20செ.மீ மற்றும் `angleQ = 90^@` ஆகும். QR மற்றும் PQ-ஐ மைய அச்சுகளாகக் கொண்டு சுழற்றும் போது உருவாகும் கூம்புகளின் வளைபரப்புகளை ஒப்பிடுக.
சாயுயரம் 19செ.மீ கொண்ட கூம்பு வடிவக் கூடாரத்தில் நால்வர் உள்ளனர். ஒருவருக்கு 22 ச.செ.மீ பரப்பு தேவைஎனில், கூடாரத்தின் உயரத்தைக் கணக்கிடவும்.
ஒரு சிறுமி தனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூம்புவடிவத் தொப்பிகளை 5720 ச-.செ.மீ பரப்புள்ள் காகிதத் தாளை பயன்படுத்தித் தயாரிக்கிறாள். 5செ.மீஆரமும், 12செ.மீ உயரமும் கொண்ட எத்தனை தொப்பிகள் தயாரிக்கமுடியும்?'
சம உயரங்களையுடைய இரு நேர்வட்டக் கூம்புகளின் ஆரங்கள் 1:3 என்ற விகிதத்தில் உள்ளன. கூம்புகளின் உயரம் சிறிய கூம்பின்ஆரத்தின் மூன்று மடங்குஎனில், வளைபரப்புகளின் விகிதம் காண்க.
ஒரு கோளத்தின் ஆரம் 25% அதிகரிக்கும் போது, அதிகமாகும் புறப்பரப்பின் சதவீதம் காண்க.
உள்ளீடற்ற ஓர் அரைக்கோள வடிவக் கிண்ணத்திற்கு ஒரு சதுர செ.மீ-க்கு வர்ணம் பூச ₹ 0.14 வீதம் செலவாகும். அதன் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 20செ.மீ மற்றும் 28செ.மீ எனில், அதனை முழுமையாக வாணம் பூச எவ்வளவு செலவாகும்?
484செ.மீ சுற்றளவுள்ள ஒரு மரக் கூம்பின் உயரம் 105செ.மீ எனில், கூம்பின் கனஅளவைக் காண்க.
6செ.மீ, 8செ.மீ மற்றும் 10செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தை அதன் செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்களை மைய அச்சுகளாகக் கொண்டு சுழற்றும் போது ஏற்படும் திண்மங்களின் கனஅளவுகளின் வித்தியாசம் காண்க.
சம ஆரங்கள் கொண்ட இரு கூம்புகளின் கன அளவுகள் 3600க.செ.மீ மற்றும் 5040 க.செ.மீ எனில், உயரங்களின் விகிதம் காண்க.
இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம் காண்க.
ஒரு திண்மக் கோளம் மற்றும் திண்ம அரைக் கோளத்தின் மொத்தப்பரப்பு சமமானதாக இருக்குமானால் அவற்றின் கன அளவுகளின் விகிதம் `3sqrt3 : 4` என நிரூபி.
ஓர் உள்ளீடற்ற தாமிரக் கோளத்தின் வெளிப்புற, உட்புறப் புறப்பரப்புகள் முறையே `576 pi` ச.செ.மீ மற்றும் `324 pi` ச.செ.மீ எனில், கோளத்தை உருவாக்கத் தேவையான தாமிரத்தின் கன அளவைக் காண்க.
உயரம் 16செ.மீ உடைய ஒரு கூம்பின் இடைக்கண்ட வடிவில் அமைந்த கொள்கலன் ஒன்றின் மேற்புறம் திறந்த நிலையில் உள்ளது. கீழ்ப்புற ஆரம் 8செ-மீ மற்றும் மேற்புற ஆரம் 20 செ.மீ கொண்ட கொள்கலனில் முழுமையாகப் பால் நிரப்பப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ₹40 எனில், நிரப்பப்படும் பாலின் மொத்த விலையைக் காண்க.
ஓர்அரைக்கோளத்தின் மேல் ஒர் உள்ளீடற்ற உருளையைப் பொருத்திய வடிவத்தில் அமைந்த ஒரு கிண்ணத்தின் விட்டம் 14செ.மீ மற்றும் உயரம் 13செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண்க
நாதன் என்ற பொறியியல் மாணவர் ஓர் உருளையின் இருபுறமும் கூம்புகள் உள்ளவாறு| மாதிரி ஒன்றை உருவாக்கினார். மாதிரியின் நீளம்12செ.மீ மற்றும் விட்டம் 3செ.மீ ஆகும். ஒவ்வொரு கூம்பின்.உயரமும் 2செ.மீ இருக்குமானால் நாதன் உருவாக்கிய மாதிரியின் கன அளவைக் காண்க.
உயரம் 2.4செ.மீ மற்றும் விட்டம் 1.4செ.மீ கொண்ட ஒரு திண்ம உருளையில் இருந்து அதேவிட்டமும் உயரமும் உள்ள ஒரு கூம்பு வெட்டி எடுக்கப்பட்டால் மீதமுள்ள திண்மத்தின் கனஅளவு எவ்வளவு கன செ.மீ ஆகும்? .
ஆரம் r அலகுகள் கொண்ட ஒரு கோளம் ஒரு நேர் வட்ட உருளையினுள் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எனில், கீழ்க்கண்டவற்றைக் கணக்கிடுக. கோளத்தின் புறப்பரப்பு காண்க.
ஆரம் r அலகுகள் கொண்ட ஒரு கோளம் ஒரு நேர் வட்ட உருளையினுள் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எனில், கீழ்க்கண்டவற்றைக் கணக்கிடுக. உருளையின்வளைபரப்பு காண்க.
ஆரம் r அலகுகள் கொண்ட ஒரு கோளம் ஒரு நேர் வட்ட உருளையினுள் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எனில், கீழ்க்கண்டவற்றைக் கணக்கிடுக. கோளத்தின் புறப்பரப்பு, உருளையின்வளைபரப்பு -ல் பெறப்பட்ட பரப்புகளின் விகிதம். காண்க.
ஓர் இறகுப்பந்தின், மேற்புறம் கூம்பின் இடைக்கண்ட வடிவிலும், கீழ்ப்புறம் அரைக் கோள வடிவிலும் உள்ளது. இடைக்கண்டத்தின் விட்டங்கள் 5செ.மீ மற்றும் 2செ.மீ ஆகவும் இறகுபந்தின் மொத்த உயரம் 7செ.மீ ஆகவும் இருக்குமானால், இறகுப் பந்தின் புறப்பரப்பைக் காண்க.
12செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8செ.மீ ஆரமுள்ள ஒர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
14செ.மீ விட்டமுள்ள குழாயிலிருந்து 15கி.மீ/மணி என்ற வேகத்தில் 50மீ நீளம் மற்றும் 44மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக வடிவத் தொட்டியினுள் தண்ணீர் பாய்கிறது. எவ்வளவு நேரத்தில் தண்ணீரின் மட்டம் 21செ.மீ-க்கு உயரும்.
முழுமையாக நீரால் நிரம்பியுள்ள ஒரு கூம்பு வடிவக் குடுவையின் ஆரம் r அலகுகள் மற்றும் உயரம் hஅலகுகள் ஆகும். நீரானது xr அலகுகள் ஆரமுள்ள மற்றொரு உருளை வடிவக் குடுவைக்கு மாற்றப்பட்டால் நீரின் உயரம் காண்க.
விட்டம் 14செ.மீ, உயரம் 8செ.மீ உடைய ஒரு திண்ம நேர் வட்டக் கூம்பு, ஒர் உள்ளீடற்ற கோளமாக உருமாற்றப்படுகிறது. கோளத்தின் வெளிவிட்டம் 10செ.மீ எனில், உள்விட்டத்தைக் காண்க.
சீனு வீட்டின் மேல்நிலை நீர்த் தொட்டி உருளை வடிவில் உள்ளது. அதன் ஆரம் 60செ.மீ மற்றும் உயரம் 105செ.மீ. 2மீ x 1.5மீ x 1மீ பரிமாணங்களை உடைய ஒரு கனச் செவ்வகக் கீழ்நிலை நீர் தொட்டியிலிருந்து நீர் உந்தப்பட்டு மேலேயுள்ள உருளை வடிவத் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது. தொடக்கத்தில் கீழ்த்தொட்டியில் நீர் முழுமையாக இருப்பதாகக் கருதுக. மேல்தொட்டிக்கு நீர் ஏற்றிய பிறகு மீதமுள்ள நீரின் கன அளவைக் காண்க.
ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 6செ.மீ மற்றும் 10செ.மீ ஆகும். அது உருக்கப்பட்டு 14செ.மீ விட்டமுள்ள ஒரு திண்ம உருளையாக்கப்பட்டால், அவ்வுருளையின் உயரம் காண்க.
6செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் உருக்கப்பட்டுச் சீரான தடிமனுள்ள ஓர் உள்ளீடற்ற உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் வெளி ஆரம் 5செ:மீ மற்றும் உயரம் 32செ.மீ எனில், உருளையின் தடிமனைக் காண்க.
ஒர் அரைக்கோள வடிவக் கிண்ணத்தின் விளிம்பு வரையில் பழச்சாறு நிரம்பியுள்ளது. உயரத்தை விட 50% அதிக ஆரம் கொண்ட உருளை வடிவப் பாத்திரத்திற்குப் பழச்சாறு மாற்றப்படுகிறது. அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவற்றின் விட்டங்கள் சமமானால் கிண்ணத்திலிருந்து எவ்வளவு சதவீதப் பழச்சாறு உருளைவடிவ பாத்திரத்திற்கு மாற்றப்படும்?
15செ.மீ உயரமும் 16செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர் வட்டக் கூம்பின் வளைபரப்பு
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக் கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
ஆரம் 5செ.மீ மற்றும் சாயுயரம் 13செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரத்தை காண்க.
ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கனஅளவுகளின் விகிதம்.
ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு எவ்வளவு?
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14செ.மீ மற்றும் அதன் தடிமன் 4செ.மீ ஆகும். உருளையின் உயர ம்20செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கனஅளவு
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின்_ மடங்காகும்.
x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில், கூம்பின் உயரம் காண்க.
16செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கனஅளவு
கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஒர் இறகு பந்தின் வடிவம் கிடைக்கும்.
`r_1` அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு `r_2` அலகுகள் ஆரமுடைய 8 சமகோளபந்துகளாக ஆக்கப்படுகிறது எனில், `r_1 : r_2`
1செ.மீ ஆரமும் 5செ.மீ உயரமும் கொண்ட் ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்ச கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கனஅளவு (௧.செ.மீ-ல்)
இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே `h_1` அலகுகள் மற்றும் `r_1` அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே `h_2` அலகுகள் மற்றும் `r_2` ,அலகுகள் மற்றும் `h_2 : h_1` = 1:2 எனில், `r_2 , r_1` -ன் மதிப்பு.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
7செ.மீ நீளமுள்ள ஒர் உருளை வடிவ மை குடுவையின் விட்டம் 5மி.மீ ஆகும். மை முழுமையாகவுள்ள உருளையைக் கொண்டு சராசரியாக 330 வார்த்தைகள் எழுதலாம். ஒரு லிட்டரில் ஐந்தில் ஒரு பங்குமை ஒரு பாட்டிலில் உள்ளது எனில், அதனைப் பயன்படுத்தி எத்தனை வார்த்தைகள் எழுதலாம்?
ஆரம் 1.75மீ உள்ள ஒர் அரைக் கோளவடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் விநாடிக்கு 7லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாகக் காலி செய்யலாம்?
r அலகுகள் ஆரம் கொண்ட ஒரு திண்ம அரைக் கோளத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கூம்பின் மீப்பெரு கனஅளவு என்ன?
ஒரு கூம்பின் இடைக்கண்டம், 10செ.மீ நீளமுள்ள் ஒர் உருளையுடன் இணைக்கப்பட்ட எண்ணெய்ப் புனலின் மொத்த உயரம் 22செ.மீ ஆகும். உருளையின் விட்டம் 8செ.மீ மற்றும் புனலின் மேற்புறவிட்டம் 18செ.மீ எனில், புனலை உருவாக்கத் தேவையான தகர அட்டையின் பரப்பைக் காண்க.
உயரம் 10செ.மீ மற்றும் விட்டம் 4.5செ.மீ உடைய ஒரு நேர் வட்ட உருளையை உருவாக்க 1.5செ.மீ விட்டமூம், 2மி.மீ தடிமன் கொண்ட எத்தனை வட்டவில்லைகள் தேவை?
ஒர் உள்ளீடற்ற உலோக உருளையின் வெளிப்புற ஆரம் 4.3செ.மி, உட்புற ஆரம் 1.1செ.மீ மற்றும் நீளம் 4செ.மீ. உலோக உருளையை உருக்கி 12செ.மீ நீளமுள்ள வேறொரு திண்ம உருளை உருவாக்கப்பட்டால் புதிய உருளையின் விட்டத்தைக் கணக்கிடுக.
ஓர் இடைக்கண்டத்தின் இரு முனைகளின் சுற்றளவுகள் 18மீ, 16மீ மற்றும் அதன் சாயுயரம் 4மீ ஆகும். ஒரு சதுரமீட்டருக்கு ₹100வீதம் இடைக்கண்டத்தின் வளைபரப்பில் வாணம் பூச ஆகும் மொத்தச் செலவு என்ன?
ஓர் உள்ளீடற்ற அரைக்கோளக் கிண்ணத்தை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கனஅளவு `frac{436 pi}{3}` க.செ.மீ ஆகும். கிண்ணத்தின் வெளிவிட்டம் 14செ.மீ எனில் அதன் தடிமனைக் கணக்கிடுக.
ஒரு கூம்பின் கனஅளவு 1005`frac{5}{7}` க.செ.மீ மற்றும் கீழ் வட்டப்பரப்பு 201`frac{1}{7}` ௪:செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.
ஒரு வட்டக்கோண வடிவில் உள்ள உலோகத் தகட்டின் ஆரம் 21செ.மீ மற்றும் மையக் கோணம் `216^@` ஆகும். வட்டக்கோணப் பகுதியின் ஆரங்களை இணைத்து உருவாக்கப்படும் கூம்பின் கனஅளவைக் காண்க.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புற மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண்.(`pi` =`frac{22}{7}` பயன்படுத்தி)
செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளவு 28.மிx16மீx11மி. இதற்கு சமமான கொள்ளளவும் 28மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
1,5செ.மீ விட்டமும் 0.2செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லை தேவைப்படும்?
ஒரு உலோகக்கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிலிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம்10செ.மீ, ஆரம்.3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக் கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
ஓர் உருளையி ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் எத்தனை மடங்காகும்.
கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஒர் இறகு பந்தின் வடிவம் கிடைக்கும்.
இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே `h_1` அலகுகள் மற்றும் `r_1` அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே `h_2` அலகுகள் மற்றும் `r_2` ,அலகுகள் மற்றும் `h_2 : h_1` = 1:2 எனில், `r_2 , r_1` -ன் மதிப்பு.
ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் மற்றும் நீளம் முறையே 16 செ.மீ மற்றும் 13 செ.மீ ஆகும். அதன் தடிமன் 4 செ.மீ எனில் உருளையின் மொத்தப் புறப்பரப்பு எவ்வளவு?
12செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8செ.மீ ஆரமுள்ள ஒர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
ஆரம் 1.75மீ உள்ள ஒர் அரைக் கோளவடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் விநாடிக்கு 7லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாகக் காலி செய்யலாம்?
உயரம் 10செ.மீ மற்றும் விட்டம் 4.5செ.மீ உடைய ஒரு நேர் வட்ட உருளையை உருவாக்க 1.5செ.மீ விட்டமூம், 2மி.மீ தடிமன் கொண்ட எத்தனை வட்டவில்லைகள் தேவை?
ஓர் இறகுப்பந்தின், மேற்புறம் கூம்பின் இடைக்கண்ட வடிவிலும், கீழ்ப்புறம் அரைக் கோள வடிவிலும் உள்ளது. இடைக்கண்டத்தின் விட்டங்கள் 5செ.மீ மற்றும் 2செ.மீ ஆகவும் இறகுபந்தின் மொத்த உயரம் 7செ.மீ ஆகவும் இருக்குமானால், இறகுப் பந்தின் புறப்பரப்பைக் காண்க.
ஒரு வட்டக்கோண வடிவில் உள்ள உலோகத் தகட்டின் ஆரம் 21செ.மீ மற்றும் மையக் கோணம் `216^@` ஆகும். வட்டக்கோணப் பகுதியின் ஆரங்களை இணைத்து உருவாக்கப்படும் கூம்பின் கனஅளவைக் காண்க.
EXERCISE questions and complete solutions for chapter அளவியல் of SURA MATHS (TAMIL) of Class 10