Class 10 | MATHS |
Chapter | ஆயத்தொலை வடிவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க. (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5)
கீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க. (-10, -4), (-8, -1) மற்றும் (-3, -5)
கீழ்க்காணும் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும். `(- 1/2, 3)`, (-5, 6) மற்றும் (-8, 8)
கீழ்க்காணும் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும். (a, b + c), (b, c + a) மற்றும் (c, a + b)
கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டில் அமைந்தவை எனில், 'a' -யின் மதிப்பைக் காண்க. (2, 3), (4, a) மற்றும் (6, -3)
கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டில் அமைந்தவை எனில், 'a' -யின் மதிப்பைக் காண்க. (a, 2 - 2a), (-a + 1, 2a) மற்றும் (-4 - a, 6 - 2a)
கொடுக்கப்பட்ட புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க? (-9, -2), (-8, -4), (2, 2) மற்றும் (1, -3)
கொடுக்கப்பட்ட புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க? (-9, 0), (-8, 6), (-1, -2) மற்றும் (-6, -3)
(-4, -2), (-3, k), (3, -2) மற்றும் (2, 3) ஆகியவற்றை .முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு 28 ச. அலகுகள் எனில், k -யின் மதிப்புக் காண்க.
A (-3, 9), B (a, b) மற்றும் C (4, -5) என்பன ஒரு கோடமைந்த புள்ளிகள் மற்றும் a + b = 1 எனில், a மற்றும் b -யின் மதிப்பைக் காண்க.
Let P(11, 7), Q(13.9, 4) an dR(9.5, 4) be the mid points of the sides AB, BC and AC respectively of `triangleABC`. Find the coordinates of the vertices A, B, and C. Hence find the area of `triangleABC` and compare this with area of `trianglePQR`.
நாற்கர வடிவ நீச்சல் குளத்தின் கான்கிரீட் உள்முற்றமானது படத்தில் காட்டியுள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது எனில், உள்முற்றத்தின் பரப்பு காண்க?
A(-5, -4), B(1, 6) மற்றும் C(7, -4) ஆகியவற்றை முனைப்புள்ளிகளாகக் கொண்ட முக்கோண வடிவக் கண்ணாடிக்கு வர்ணம் பூசப்படுகிறது. 6 சதுர அடி பரப்புக்கு வர்ணம் பூச ஒரு வாளி தேவைப்படுகிறது எனில் கண்ணாடியின் முழுப் பகுதியையும் ஒரு முறை வர்ணம் பூச எத்தனை வாளிகள் தேவைப்படும்?
படத்தைப் பயன்படுத்தி முக்கோணம் AGF-ன் பரப்பைக் காண்க
படத்தைப் பயன்படுத்தி முக்கோணம் FED-ன்பரப்பைக் காண்க.
படத்தைப் பயன்படுத்திப் பரப்பைக் காண்க. நாற்கரம் BCEG.
X அச்சுடன் மிகை திசையில் சாய்வு கோணத்தைக் கொண்ட கோட்டின் சாய்வு என்ன? `90°`
X அச்சுடன் மிகை திசையில் சாய்வு கோணத்தைக் கொண்ட கோட்டின் சாய்வு என்ன? `0°`
பின்வரும் சாய்வுகளைக் கொண்ட நேர் கோடுகளின் சாய்வுக் கோணம் என்ன? 0
பின்வரும் சாய்வுகளைக் கொண்ட நேர் கோடுகளின் சாய்வுக் கோணம் என்ன? 1.
கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வைக் காண்க. `(5, sqrt5)` மற்றும் ஆதிப்புள்ளி
கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வைக் காண்க. `(sin theta, -cos theta)` மற்றும் `(- sin theta, cos theta)`
A(5, 1) மற்றும் P ஆகியவற்றை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு என்ன? இதில் P என்பது (4, 2) மற்றும் (-6,4) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி ஆகும்.
(-3, -4), (7, 2) மற்றும் (12, 5) என்ற புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனக்காட்டுக.
(3, -1), (a, 3) மற்றும் (1, -3) ஆகிய மூன்று புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனில் a-யின் மதிப்பு காண்க?.
(-2, a) மற்றும் (9, 3) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டின் சாய்வு `-1/2` எனில், a-யின் மதிப்பு காண்க.
(-2, 6) மற்றும் (4, 8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோடானது (8, 12) மற்றும் (x, 24) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டிற்குச் செங்குத்து எனில், x-யின் மதிப்பு காண்க.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக. மேலும் பிதாகரஸ் தேற்றத்தை நிறைவு செய்யுமா என ஆராய்க. A(1, -4), B(2, -3) மற்றும் C(4, -7)
கொடுக்கப்பட்ட புள்ளிகள் செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக. மேலும் பிதாகரஸ் தேற்றத்தை நிறைவு செய்யுமா என ஆராய்க. L(0,5), M(9, 12) மற்றும் N(3, 14)
A(2.5, 3.5), B(10, -4), C(2.5, -2.5) மற்றும் D (-5, 5) ஆகியன இணைகரத்தின் முனைப் புள்ளிகள் எனக் காட்டுக.
A(2, 2), B(-2, -3), C(1, -3) மற்றும் D(x, y) ஆகிய புள்ளிகள் இணைகரத்தை அமைக்கும் எனில், x மற்றும் y-யின் மதிப்பைக் காண்க.
A(3, -4), B(9, -4), C(5, -7) மற்றும் D(7-7) முனைப் புள்ளிகள் ABCD என்ற சரிவகத்தை அமைக்கும் எனக் காட்டுக.
A quadrilateral has vertices at `A(-4, -2), B(5, -1), C(6, 5) and D(-7, 6)`. Show that the mid-point of its sides form a parallelogram.
PQRS என்பது ஒரு சாய்சதுரம். அதன் மூலை விட்டங்கள் PR மற்றும் QS ஆனது வெட்டும் புள்ளி M ஆகவும் QS = 2PR எனவும் உள்ளது. S மற்றும் M-யின் ஆயப் புள்ளிகள் முறையே (1,1) மற்றும் (2, -1) எனில், P-யின் ஆயப்புள்ளிகளைக் காண்க.
(1, -5) மற்றும் (4, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழியாகச் செல்வதும், கீழக்கண்டவற்றிற்கு இணையானதுமான நேர்கோட்டின் சமன் பாட்டைக் காண்க. X அச்சு
(1, -5) மற்றும் (4, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழியாகச் செல்வதும், கீழக்கண்டவற்றிற்கு இணையானதுமான நேர்கோட்டின் சமன் பாட்டைக் காண்க. Y அச்சு
2(x - y) + 5 = 0 என்ற நேர்கோட்டு சமன்பாட்டின் சாய்வு, சாய்வு கோணம் மற்றும் y - வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் காண்க.
சாய்வுகோணம் `30°` மற்றும் y -வெட்டுத்துண்டு -3 ஆகியவற்றைக் கொண்ட நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
`sqrt 3x + (1 - sqrt 3)y = 3` என்ற நேர்க்கோட்டு சமன்பாட்டின் சாய்வு, y - வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் காண்க.
(-2, 3) மற்றும் (8, 5) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் கோடானது, y = ax+2 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தானது எனில், 'a' -யின் மதிப்பு காண்க.
(19, 3) என்ற புள்ளியை அடியாகக் கொண்ட குன்றானது செங்கோண முக்கோண வடிவில் உள்ளது. தரையுடன் குன்று ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் `45°` எனில், குன்றின் அடி மற்றும் உச்சியை இணைக்கும் கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
கொடுக்கப்பட்ட இரு புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. `(2, 2/3)` மற்றும் `(-1/2, -2)`
கொடுக்கப்பட்ட இரு புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. (2, 3) மற்றும் (-7, -1)
ஒரு பூனை xy-தளத்தில் (-6,-4) என்ற புள்ளியில் உள்ளது. (5, 11) என்ற புள்ளியில் ஒரு பால் புட்டி வைக்கப்பட்டுள்ளது. பூனைமிகக் குறுகிய தூரம் பயணித்துப் பால் அருந்த விரும்புகிறது எனில், பாலை பருகுவதற்குத் தேவையான பாதையின் சமன்பாட்டைக் காண்க.
A(6, 2) B(-5, -1) மற்றும் C(1, 9)-ஐ முனைகளாகக் கொண்ட `/_\ABC` யின் முனை A -யிலிருந்து வரையப்படும் நடுக்கோடு மற்றும் குத்துக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(-1, 2) என்ற புள்ளி வழி செல்வதும், சாய்வு`-5/4` உடையதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
நீங்கள் ஒரு பாடலை பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்ய வேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y -ஆனது (தசமத்தில்) y = -0.1x +1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால், சமன்பாட்டின் வரைபடம் வரைக.
நீங்கள் ஒரு பாடலை பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்ய வேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y -ஆனது (தசமத்தில்) y = -0.1x +1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால், பாடலின் மொத்த MB அளவைக் காண்க.
நீங்கள் ஒரு பாடலை பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்ய வேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y -ஆனது (தசமத்தில்) y = -0.1x +1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால், 75% பாடலைப் பதிவிறக்கம் செய்ய எவ்வளவு வினாடிகள் ஆகும்?
நீங்கள் ஒரு பாடலை பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்ய வேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y -ஆனது (தசமத்தில்) y = -0.1x +1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால், எத்தனை வினாடிகள் கழித்துப் பாடல் முழுமையாகப் பதிவிறக்கம் செய்யப்படும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள x, y வெட்டுத் துண்டுகளைக் கொண்ட. நேர்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. 4, -6
கீழே கொடுக்கப்பட்டுள்ள x, y வெட்டுத் துண்டுகளைக் கொண்ட. நேர்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. `-5, 3/4`
கொடுக்கப்பட்ட நேர்கோடுகளின் சமன்பாட்டிலிருந்து ஆய அச்சுகளின் மேல் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க. 3x - 2y - 6 = 0
கொடுக்கப்பட்ட நேர்கோடுகளின் சமன்பாட்டிலிருந்து ஆய அச்சுகளின் மேல் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க. 4x + 3y + 12 = 0
நேர்கோட்டின் சமன்பாட்டினைக் காண்க. (1,-4) என்ற புள்ளி வழிச் செல்வதும், வெட்டுத்துண்டுகளின் விகிதம் 2:5
நேர்கோட்டின் சமன்பாட்டினைக் காண்க. (-8, 4) என்ற புள்ளி வழிச் செல்வதும், ஆய அச்சுகளின் வெட்டுத்துண்டுகள் சமம்
பின்வரும் நேர்கோடுகளின் சாய்வைக் காண்க. 5y - 3 = 0
பின்வரும் நேர்கோடுகளின் சாய்வைக் காண்க. `7x - 3/17 = 0`
y = 0.7x -11க்கு இணையாக அமையும் நேர்கோட்டின் சாய்வைக் காண்க.
x = -11 -க்கு செங்குத்தாக அமையும் நேர்கோட்டின் சாய்வைக் காண்க.
கொடுக்கப்பட்ட நேர்கோடுகள் இணையானவையா அல்லது செங்குத்தானவையா எனச் சோதிக்கவும். `x/3 + y/4 + 1/7 = 0` மற்றும் `(2x)/3 + y/2 + 1/10 = 0`
கொடுக்கப்பட்ட நேர்கோடுகள் இணையானவையா அல்லது செங்குத்தானவையா எனச் சோதிக்கவும்.`5x + 23y + 14 = 0` மற்றும் `23x - 5y + 9 = 0`
`12y = -(p + 3)x + 12, 12x - 7y = 16` ஆகிய நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில் `p` யின் மதிப்பைக் காண்க.
Q(3, -2) மற்றும் R(-5, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டிற்கு இணையானதும், P (-5, 2) என்ற புள்ளி வழி செல்வதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(6, 7) மற்றும் (2, -3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டிற்குச் செங்குத்தானதும் (6,-2) என்ற புள்ளி வழி செல்வதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
`/_\ABC` -யின் முனைகள் A(-3, 0) B(10, -2) மற்றும் C(12, 3) எனில், A மற்றும் B-யிலிருந்து முக்கோணத்தின் எதிர்பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் சமன்பாடுகளைக் காண்க.
A(-4, 2) மற்றும் B(6, -4) என்ற புள்ளிகளை இணைக்கும் மையக் குத்துக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
7x + 3y = 10, 5x - 4y = 1 ஆகிய நேர் கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், 13x + 5y + 12 = 0 என்ற நேர்கோட்டிற்கு இணையாகவும் அமையும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
5x - 6y = 2, 3x + 2y = 10 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும் 4x - 7y + 13 = 0 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும் அமையும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
8x + 3y = 18, 4x + 5y = 9 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளியின் வழியாகவும், (5, -4) மற்றும் (-7, 6) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி வழியாகச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
(-5, 0), (0, -5) ) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p-யின் மதிப்பு
3x - y = 4 மற்றும் x + y = 8 is ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு `1/8` எனில், 'a' -யின் மதிப்பு.
(0, 0) மற்றும் (-8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு.
கோட்டுத்துண்டு PQ யின் சாய்வு `1/sqrt 3` எனில், PQ -க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
Y அச்சில் அமையும் புள்ளி A-யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு
7x - 3y + 4 = 0 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு
`l_(1) : 3y = 4x + 5`, `l_(2) : 4y = 3x - 1`, `l_(3) : 4y + 3x = 7`, `l_(4) : 4x + 3y = 2` எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழக்கண்ட கூற்றுகளில் எது உண்மை ?
8y = 4x + 21 என்ற நேர்கோட்டின் சமன் பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
P(-1, -1), Q(-1, 4), R(5, 4) மற்றும் S(5, -1) ஆகிய புள்ளிகளால் ஆன செவ்வகம் PQRS-யில் A, B, C மற்றும் D என்பன முறையே பக்கங்கள் PQ, QR, RS மற்றும் SP-யின் நடுப்புள்ளிகள் ஆகும். ABCD என்ற நாற்கரமானது ஒரு சதுரம், செவ்வகம் அல்லது சாய்சதுரமா? உங்கள் விடையைக் காரணத்தோடு விளக்குக.
ஒரு முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள். (2,1) மற்றும் (3, -2) என்பன முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகள் ஆகும். மூன்றாம் முனைப் புள்ளி (x, y) என்பதில் y = x + 3 என இருந்தால் அப்புள்ளியைக் காண்க.
3x + y - 2 = 0, 5x + 2y - 3 = 0 மற்றும் 2x - y - 3 = 0 ஆகிய கோடுகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க.
A(-5,7), B(-4, k), C(-1, -6) மற்றும் D(4, 5) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு 72 ச. அலகுகள் எனில், k-யின் மதிப்பைக் காண்க.
தொலைவு காணும் சூத்திரத்தைப் பயன் படுத்தாமல், (-2, -1), (4, 0), (3, 3) மற்றும் (-3, 2) என்பன இணை கரத்தின் முனைப் புள்ளிகள் எனக் காட்டுக.
இரு வெட்டுத்துண்டுகளின் கூடுதல் மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் முறையே 1, -6 எனில், நேர்கோடுகளின் சமன்பாட்டைக் காண்க.
ஒரு பால்கடை உரிமையாளர் 1 லிட்டர் ₹16 வீதம் ஒரு வாரத்திற்கு 1220 லிட்டரும், 1 லிட்டர் ₹14 வீதம் ஒரு வாரத்திற்கு 980 லிட்டரும் விற்பனை செய்கிறார். விற்பனை விலையானது தேவையோடு நேரிய தொடர்பு உடையது என ஊகித்துக் கொண்டால், 1 லிட்டர், ₹17 வீதம் ஒரு வாரத்திற்கு எத்தனை லிட்டர் விற்பனை செய்வார் ?
x + 3y = 7 என்ற நேர்கோட்டினைச் சமதள ஆடியாகக் கொண்டு (3, 8) என்ற புள்ளியின் பிம்பப் புள்ளியைக் காண்க.
4x + 7y - 3 = 0 மற்றும் 2x - 3y + 1 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், ஆய அச்சுகளின் வெட்டுத் துண்டுகள் சமமானதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
2x - 3y + 4 = 0 மற்றும் 3x + 4y - 5 = 0 என்ற நேர்க்கோடுகளால் குறிக்கப்படும் இரண்டு பாதைகள் சந்திக்கும் புள்ளியில் நிற்கும் ஒருவர் 6x - 7y + 8 = 0 என்ற நேர்கோட்டால் குறிக்கப்படும் பாதையைக் குறுகிய நேரத்தில் சென்றடைய விரும்புகிறார் எனில். அவர் செல்ல வேண்டிய பாதையின் சமன்பாட்டினைக் காண்க.
(x, y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y கிடையேயான உறவைக் காண்க
கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக்காட்டுக.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
EXERCISE questions and complete solutions for chapter ஆயத்தொலை வடிவியல் of SURA MATHS (TAMIL) of Class 10