Class 10 | MATHS |
Chapter | எண்களும் தொடர்வர்சைகளும் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
3 ஆல் வகுக்கும் போது மீதி 2 -ஐத் தரக்கூடிய அனைத்து மிகைமுழுக்களையும் காண்க.
ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினார் . எத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும் மற்றும் எத்தனை பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க.
தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் 2 ஆல் வகுபடும் என நிறுவுக.
a, b மற்றம் c என்ற மிகை முழுக்களை 13 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதிகள் முறையே 9, 7, 10 எனில் a + b+ c ஆனது 13 ஆல் வகுபடும் என நிருபி.
எந்த மிகை முழுவின் வர்க்கத்தையும் 4 ஆல் வகுக்கும் போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும் என நிறுவுக..
யூக்ளிடின் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி 340 மற்றும் 412ன் மீ.பொ.வ காண்க
யூக்ளிடின் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி 867 மற்றும் 255ன் மீ.பொ.வ காண்க
யூக்ளிடின் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி 10224 மற்றும் 9648ன் மீ.பொ.வ காண்க.
யூக்ளிடின் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி 84, 90 மற்றும் 120ன் மீ.பொ.வ காண்க.
1230 மற்றும் 1926 ஆகிய எண்களைவகுக்கும் போது மீதி 12 -ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க.
32 மற்றும் 60 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி d என்க. `d = 32x + 60y` எனில் x மற்றும் y என்ற முழுக்களைக் காண்க.
ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதியைக் காண்க?
எந்த இரு அடுத்தடுத்த மிகை முழுவும் சார்பகா எண்கள் என நிறுவுக.
n ஒர் இயல் எண் எனில் , எந்த 7 மதிப்புகளுக்கு `4^n` ஆனது 6 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும் ?
m மற்றும் n இயல் எண்கள் எனில் , எந்த m -ன் மதிப்புகளுக்கு `2^n * 5^m` என்ற எண் 5 என்ற இலக்கத்தைக் கொண்டுமுடியும்?
252525 மற்றும் 363636 என்ற எண்களின் மி.பொ.வ காண்க.
13824 = `2^a * 3^b` எனில் a மற்றும் b -யின் மதிப்பு காண்க.
`p1^x1 * p2^x2 * p3^x3 * p4^x4` = 113400 இங்கு p1, p2, p3, p4 என்பன ஏறு வரிசையில் அமைந்த பகா எண்கள் மற்றும் x1, x2, x3, x4 என்பன முழுக்கள் எனில் p1, p2, p3, p4 மற்றும் x1, x2, x3, x4 ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
அடிப்படை எண்ணியல் தேற்றத்தைப் பயன்படுத்தி 408 மற்றும் 170 என்ற எண்களின் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ காண்க.
24,15,36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.
35, 56 மற்றும் 91 ஆல் வகுக்கும் போது மீதி 7-ஐத் தரக்கூடிய மிகச் சிறிய எண் எது?
முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய "குறைந்த பட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க: 71 ≡ x (மட்டு 8)
பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய "குறைந்த பட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க: 78 + x ≡ 3 (மட்டு 5)
பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய "குறைந்த பட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க: 89 ≡ (x + 3) (மட்டு 4)
பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய "குறைந்த பட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க: 96 ≡ `(x/7)` (மட்டு 5)
பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய "குறைந்த பட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க: 5x ≡ 4 (மட்டு 6)
x ஆனது மட்டு 17 -ன் கீழ் 13 உடன் ஒருங்கிசைவாக உள்ளது எனில் , 7x - 3 எந்த எண்ணுடன் ஒருங்கிசைவாகஇருக்கும்.
தீர்க்க: 5x ≡ 4 (மட்டு 6)
தீர்க்க: 3x- 2 ≡ 0 (மட்டு 11)
முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?
பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு முன்பு நேரம் என்ன?
இன்று செவ்வாய் கிழமை, என்னுடைய மாமா 45 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார் . என்னுடைய மாமா எந்தக் கிழமையில் வருவார்?
எந்த ஒரு மிகை முழு எண் n-ற்கும் `2^n + 6 * 9^n` ஆனது 7 ஆல் வகுபடும் என நிறுவுக.
`2^81` ஐ 17 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி காண்க.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்லப் பயண நேரம் தோராயமாக 11 மணிநேரம். விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை 23:30 ணிக்குத் தொடங்கியது. சென்னையின் திட்ட நேரமானது லண்டனின் திட்ட நேரத்தைவிட 4:30 மணி நேரம் முன்னதாக இருக்குமெனில், விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தைக் காண்க.
பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க: 8, 24, 72, ...
பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க: 5, 1, -3, ...
பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க: `1/4, 2/9, 3/16`, ...
பின்வரும் n-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க: `a n = (n^3) - 2`
பின்வரும் n-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க: `an = (-1)^(n+1) n(n+1)`
பின்வரும் n-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க: `an = 2n^2 - 6`
கீழே கொடுக்கப்பட்டுள்ள n -வது உறுப்பைக் காண்க: 2,5,10,17,...
கீழே கொடுக்கப்பட்டுள்ள n -வது உறுப்பைக் காண்க: `0, 1/2, 2/3`, ...
கீழே கொடுக்கப்பட்டுள்ள n -வது உறுப்பைக் காண்க: 3, 8, 13, 18, ...
கீழ்கண்ட தொடர்வரிசைகள் ஒவ்வொன்றிலும் n-வது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளைக் காண்க: an = `(5n)/ (n + 2)` , a6 மற்றும் a13
கீழ்கண்ட தொடர்வரிசைகள் ஒவ்வொன்றிலும் n-வது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளைக் காண்க: `an = -(n^2 - 4)` , a4 மற்றும் a11
`a_{n} = { (n^2 - 1)/ (n + 3)` , n ஒர் இரட்டை எண் `n in N` `n^2/ (2n + 1)` , ஓர் ஒற்றை எண் `n in N` என்பது n-வது உறுப்பு எனில் `a_{8}` , மற்றும் `a_{15}` காண்க.
a1 = 1, a2 = 1 மற்றும் an = 2a(n-1) + a(n-2), n ge 3, `n in NN` எனில் , தொடர்வரிசையின் முதல் ஆறு உறுப்புகளைக் காண்க.
பின்வரும் தொடர்வரிசைகள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையா எனச் சோதிக்கவும்: a - 3, a - 5, a - 7, ......
பின்வரும் தொடர்வரிசைகள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையா எனச் சோதிக்கவும்: `1/2, 1/3, 1/4, 1/5`, ......
பின்வரும் தொடர்வரிசைகள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையா எனச் சோதிக்கவும்: 9, 13, 17, 21, 25, ......
பின்வரும் தொடர்வரிசைகள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையா எனச் சோதிக்கவும்: `-1/3, 0, 1/3, 2/3`, ......
பின்வரும் தொடர்வரிசைகள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையா எனச் சோதிக்கவும்: 1, -1, 1, -1, 1, -1, ......
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு a மற்றும் பொது வித்தியாசம் d-க்கு கூட்டுத்தொடர் வரிசைகளைக் காண்க: a = 5, d = 6
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு a மற்றும் பொது வித்தியாசம் d-க்கு கூட்டுத்தொடர் வரிசைகளைக் காண்க: a = 7, d = -5
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு a மற்றும் பொது வித்தியாசம் d-க்கு கூட்டுத்தொடர் வரிசைகளைக் காண்க: a = `3/4`, d = `1/2`
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொது உறுப்புகளுடைய கூட்டுத் தொடர்வரிசைகளின் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண்க: tn = -3 + 2n
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுஉறுப்புகளுடைய கூட்டுத் தொடர்வரிசைகளின் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண்க: tn = 4 - 7n
-11,-15,-19,...என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 19 -வது உறுப்பைக் காண்க.
16,11,6,1,... என்ற கூட்டுத் தொடர்வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?
9, 15, 21, 27,...,183.என்ற கூட்டுத் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் ஒன்பதாவது உறுப்பின் ஒன்பது மடங்கும் , பதினைந்தாவது உறுப்பின் பதினைந்து மடங்கும் சமம் எனில் இருபத்து நான்காவது உறுப்பின் ' ஆறு மடங்கானதுபூச்சியம் என நிறுவுக.
3 + k, 18 - k, 5k + 1 என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் k-யின் மதிப்பு காண்க.
x, 10, y, 24, z என்பவை ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில் , x, y, z, ஆகியவற்றின் மதிப்பு காண்க.
ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்து ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும் ?
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமைந்த அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் கூடுதல் 27 மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் 288 எனில் , அந்த மூன்று உறுப்புகளைக் காண்க.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6 -வது மற்றும் 8-வது உறுப்புகளின் விகிதம் 7:9 எனில். 9-வது மற்றும் 13-வது உறுப்புகளின் விகிதம் காண்க.
ஒரு குளிர் காலத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை ஊட்டியின் வெப்பநிலை கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன.திங்கள் கிழமை முதல் புதன் கிழமை வரை உள்ள வெப்ப நிலைகளின் கூடுதல் `0^@ C` மற்றும் புதன் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை உள்ள வெப்பநிலைகளின் கூடுதல் `18^@ C` எனில், ஐந்து நாட்களின் வெப்பநிலைகளைக் காண்க.
பிரியா தனது முதல் மாத வருமானமாக ₹15,000 ஈட்டுகிறார் அதன் பிறகு. ஒவ்வோர் ஆண்டும் அவரது வருமானம் ₹1500 உயர்கிறது. அவளுடைய முதல் மாத செலவு ₹13,000 மற்றும் மாதாந்திரச் செலவு ஒவ்வோர் ஆண்டும் ₹900 உயர்கிறது. பிரியாவின் மாதாந்திர சேமிப்பு ₹20,000 அடைய எவ்வளவு காலம் ஆகும்.
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க: 3,7,11... 40 உறுப்புகள் வரை
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க: 102,97, 92.... 27 உறுப்புகள் வரை
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க: 6 + 13 + 20 + ... + 97
5-லிருந்து தொடங்கி எத்தனை தொடர்ச்சியான ஒற்றைப்படை முழுக்களைக் கூட்டினால் கூடுதல் 480 கிடைக்கும்?
ஒரு கூட்டுத்தொடர் வரிசையின் n -வது உறுப்பு 4n - 3 எனில் , அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க.
ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் 'n' உறுப்புகளின் கூடுதல் `2n^2 - 3n` எனில் , அது ஒரு கூட்டுத் தொடர் வரிசை என நிரூபிக்க.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 104-வது உறுப்பு மற்றும் 4-வது உறுப்புகள் முறையே 125 மற்றும் 0. அத்தொடர் வரிசையின் முதல் 35 உறுப்புகளின் கூடுதல் காண்க...
450 -க்கு குறைவாக உள்ள அனைத்து ஒற்றை மிகை முழுக்களின் கூடுதல் காண்க.
Find the sum of all natural numbers between 602 and 902 which are not divisible by 4.
இரகு ஒரு மடிக்கணினி வாங்கவிரும்புகிறார். அவர் அதற்கான தொகையான ₹40,000 -ஐ உடனடியாக பணமாகவும் செலுத்தலாம் அல்லது 10 மாதத் தவணைகளில் முதல் தவணை 4800, இரண்டாம் தவணை ₹4750, மூன்றாம் தவணை ₹4700 என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். அவர் இந்த வகையில் பணம் செலுத்துகிறார் எனில், 10 மாதத் தவணைகளில் அவர் செலுத்திய மொத்தத் தொகை காண்க.
இரகு ஒரு மடிக்கணினி வாங்கவிரும்புகிறார். அவர் அதற்கான தொகை ₹40000 உடனடியாக பணமாகவும் செலுத்தலாம் அல்லது 10 மாதத் தவணைகளில் முதல் தவணை 4800, இரண்டாம் தவணை ₹4750, மூன்றாம் தவணை ₹4700 என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். அவர் இந்த வகையில் பணம் செலுத்துகிறார் எனில், மாதத்தவணை அடிப்படையில் பணம் செலுத்தும் போது அவர் அசலைக் காட்டிலும் கூடுதலாகச் செலுத்திய தொகை காண்க.
ஒருவர் தான் பெற்ற ₹65,000 கடனை திருப்பிச்செலுத்த செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதை விட ₹300 கூடுதலாகச்செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
செங்கற்களினால் கட்டப்பட்ட ஒரு படிகட்டில் மொத்தம் . 30 படிகட்டுகள் உள்ளன. கீழ்ப்படிக்கட்டை: அமைப்பதற்கு 100 செங்கற்கள் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த படிக்கட்டுகள் அமைப்பதற்கு முந்தைய படிக்கட்டை விட இரண்டு செங்கற்கள் குறைவாகத் தேவைப்படுகிறது. உச்சியிலுள்ள படிக்கட்டை அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
செங்கற்களினால் கட்டப்பட்ட ஒரு படிகட்டில் மொத்தம் . 30 படிகட்டுகள் உள்ளன. கீழ்ப்படிக்கட்டை அமைப்பதற்கு 100 செங்கற்கள் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த படிக்கட்டுகள் அமைப்பதற்கு முந்தைய படிக்கட்டை விட இரண்டு செங்கற்கள் குறைவாகத் தேவைப்படுகிறது. படிக்கட்டுகள் முழுவதும் அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
S1, S2, S3, .... , Sm என்பன m வெவ்வேறுகூட்டுத்தொடர் வரிசைகளின் n உறுப்புகளின் கூடுதல் ஆகும். முதல் உறுப்புகள் 1,2,3,....m மற்றும் பொது வித்தியாசங்கள் 1, 3, 5, ...., (2m - 1) முறையே அமைந்தால் , அந்த கூட்டுத்தொடர்வரிசையில் S1+ S2 + S3 + .... + Sm = (1/2) mn(mn + 1) என நிரூபிக்க.
[ `((a - b)/ (a + b)) + ((3a - 2b)/ (a + b)) + ((5a - 3b)/ (a + b))` + ...12 உறுப்புகள் ] என்ற தொடரின் கூடுதல் காண்க.
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 3, 9, 27, 81, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 4, 44, 444, 4444, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 0.5, 0.05, 0.005, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? `1/3, 1/6, 1/12`, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 1, -5, 25, -125, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 120, 60, 30, 18, ....
பின்வரும் தொடர்வரிசைகளில் எவைபெருக்குத் தொடர்வரிசையாகும்? 16, 4, 1, `1/4`, ....
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு மற்றும் பொதுவிகிதம் உடைய பெருக்குத் தொடர்வரிசையின் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக. a = 6, r = 3
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு மற்றும் பொதுவிகிதம் உடைய பெருக்குத் தொடர்வரிசையின் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக. a = `sqrt 2`, r = `sqrt 2`
கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு மற்றும் பொதுவிகிதம் உடைய பெருக்குத் தொடர்வரிசையின் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக. a = 1000 , r = `2/5`
729, 243, 81,... என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 7 -வது உறுப்பைக் காண்க.
x + 6, x + 12 மற்றும் x + 15 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில் x-ன் மதிப்பைக் காண்க.
பின்வரும் பெருக்குத் தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க. 4, 8, 16, ....., 8192
பின்வரும் பெருக்குத் தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க. `1/3, 1/9, 1/27, ....., 1/2187`
Exercise questions and complete solutions for chapter எண்களும் தொடர்வர்சைகளும் of SURA MATHS (TAMIL) of Class 10